/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புகை மூட்டி யானையை விரட்டிய வன குழுவினர்
/
புகை மூட்டி யானையை விரட்டிய வன குழுவினர்
ADDED : டிச 16, 2025 05:26 AM

பந்தலூர் : பந்தலுார் அருகே அய்யங்கொல்லி சுற்று வட்டார பகுதிகளில், குடியிருப்புகளை ஒட்டி முகாமிடும் யானைகளை தீமூட்டி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பந்தலுார் அருகே பிதர்காடு மற்றும் சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளது.
பகல் நேரங்களில் சாலை ஓரங்கள் மற்றும் குடியிருப்புகளை ஒட்டிய புதர் பகுதிகளில் முகாமிடும் யானைகள், இரவு, 7:00 மணிக்கு மேல் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய தோட்டங்களில் புகுந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அய்யன் கொல்லி அருகே சாமியார் மலை மற்றும் புஞ்சை கொல்லி குடியிருப்புகளை ஒட்டிய, புதர் பகுதியில் கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் யானை மற்றும், 15 யானைகள் கொண்ட கூட்டம் தனித்தனியாக முகாமிட்டது.
இந்த யானைகளை வனச்சரகர் ரவி மேற்பார்வையில், வனவர் ஆனந்த் மற்றும் யானை கண்காணிப்பு, அதிவிரைவு மீட்பு குழு வன பணியாளர்கள் இணைந்து, அடர் வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானைகள் குடியிருப்புகளை ஒட்டிய தேயிலை தோட்டங்களுக்கு வர முயன்ற நிலையில் தீ மூட்டி, புகை எழுப்பி, சப்தம் போட்டு யானைகளை வனத்திற்குள் துரத்தினர்.
இதனால், குடியிருப்பு வாசிகள் நிம்மதி அடைந்தனர்.

