/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் மாஜி ராணுவ வீரரிடம் ரூ.45 லட்சம் 'ஆன்லைன்' மோசடி; மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவர் கைது

ADDED : ஜன 02, 2025 09:48 PM
ஊட்டி; ஊட்டியில் மாஜி., ராணுவ வீரரிடம், 'ஆன்லைன்' வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக, 45 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
குன்னுார் வெலிங்டன் பகுதியை சேர்ந்த மாஜி., ராணுவ வீரர் ஒருவர் தனது சேமிப்பு பணம், 45 லட்சம் ரூபாயை போலியான இணையதள வர்த்தகத்தில் முதலீடு செய்தார்.
இது தொடர்பாக, ஊட்டி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து புகார்தாரரின் வங்கி பரிவர்த்தனை விவரங்களை பெற்று, முதலீடு செய்த வங்கி கணக்கு எண்ணை கண்டுபிடித்தனர்.
விசாரணை மேற்கொண்ட போது, மேற்குவங்க மாநிலம் ஹவுரா பகுதியை சேர்ந்த ஷைலேஸ்,56, ருஸ்தம் அல,37, ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டனர் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஷா உத்தரவின் பேரில், கூடுதல் எஸ்.பி., சவுந்தரராஜன் மேற்பார்வையில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரவீணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸ் குழுவினர் மேற்குவங்க மாநிலத்துக்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த இருவரை கைது செய்து, ஊட்டிக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.