ADDED : நவ 07, 2024 08:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி; கோத்தகிரி நுாலகத்தில் வார விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, பாட்டுப் போட்டி, ஓவிய போட்டி மற்றும் வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டது.
அதில், கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்தும், 6ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை, படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
முதல் மூன்று இடங்களில் வென்றவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, வாசகர் வட்ட தலைவர் கவுரி வரதராஜன், நுாலகர் சுப்ரமணியம் மற்றும் நுாலக பணியாளர்கள் செய்திருந்தனர்.