/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இருவரை கத்தியால் குத்திய வழக்கில் 4 பேர் கைது
/
இருவரை கத்தியால் குத்திய வழக்கில் 4 பேர் கைது
ADDED : ஆக 11, 2025 08:37 PM
பாலக்காடு; பாலக்காடு அருகே, இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலில், இரு வாலிபர்களை கத்தியால் குத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு தோணிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு, 22. இவரது நண்பர் சுந்தரம் காலனியை சேர்ந்த ஷமீர், 31. இருவரும் கல்பாத்தி கணபதி கோவில் அருகே உள்ள கடைகளில் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பூ வியாபாரம் செய்யும் விஷ்ணுவின் நண்பர் ஒருவர், அவ்வழியாக சென்ற பெண்ணை கேலி செய்ததாக கூறப்படுகிறது. பெண்ணுடன் சென்ற கிருஷ்ணமூர்த்தி, 21, வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, விஷ்ணு, ஷமீர் இருவரும் சேர்ந்து, அவரை தாக்கியதாக தெரிகிறது.
அதன்பின், கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர்களான ராஜேஷ், 28, உமேஷ், 46, அபிமன்யு, 24, ஆகியோரை அழைத்து வந்து, விஷ்ணு மற்றும் ஷமீரை கத்தியால் தாக்கி விட்டு, தப்பிச் சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பாலக்காடு டவுன் மேற்கு போலீசார், வழக்குப்பதிவு செய்து, நான்கு பேரையும் கைது செய்தனர்.