/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை பொருள் கடத்திய நால்வர் குண்டர் சட்டத்தில் கைது
/
போதை பொருள் கடத்திய நால்வர் குண்டர் சட்டத்தில் கைது
போதை பொருள் கடத்திய நால்வர் குண்டர் சட்டத்தில் கைது
போதை பொருள் கடத்திய நால்வர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஜன 12, 2024 11:33 PM

கூடலுார்;கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு போதை பொருள் கடத்தியது தொடர்பாக, கூடலுாரில் கைது செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த, 4 பேரை, தமிழக போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு, கூடலுார் வழியாக கடந்த ஆண்டு, அக்., 27ல் விலை உயர்ந்த, 120 கிராம் 'மெத்தம் பேட்டமைன்' என்ற போதை பொருளை சிலர் கடத்த முயன்றனர். அவர்களை முதுமலை கக்கனல்லா சோதனை சாவடியில், நீலகிரி போலீசார் கைது செய்தனர். காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முனீர், 30, பாசில் ஜமான், 26, சையத், 21, ஷாப்பாஸ், 26, ஆகியோரை கைது செய்து, கூடலுார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
இவர்கள் நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, நீலகிரி எஸ்.பி., சுந்தரவடிவேல், நீலகிரி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று, அவர்களை குண்டர் கைது செய்ய கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.
தொடர்ந்த, கூடலுார் டி.எஸ்.பி. செல்வராஜ், சிறையில் இருந்த நான்கு பேரிடம் நேற்று முன்தினம், குண்டர் சட்டத்துக்கான உத்தரவை வழங்கி, அவர்களை கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.