/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நான்கு மாத சம்பளம் நிலுவை; சிரமத்தில் அரசு கல்லுாரி பணியாளர்கள்
/
நான்கு மாத சம்பளம் நிலுவை; சிரமத்தில் அரசு கல்லுாரி பணியாளர்கள்
நான்கு மாத சம்பளம் நிலுவை; சிரமத்தில் அரசு கல்லுாரி பணியாளர்கள்
நான்கு மாத சம்பளம் நிலுவை; சிரமத்தில் அரசு கல்லுாரி பணியாளர்கள்
ADDED : செப் 11, 2025 09:10 PM
கூடலுார்; கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் கூடலுாரில், 2003ல், கலை அறிவியல் உறுப்பு கல்லுாரி துவங்கப்பட்டது. இதேபோன்று தமிழகத்தில், 41 உறுப்பு கல்லுாரிகள் துவங்கப்பட்டன. கல்லுாரி நிர்வாகம், பல்கலைக்கழகங்களின் நேரடியாக பார்வையில் செயல்பட்டு வந்தது. தொகுப்பூதியத்தில் பணியாற்றிய கல்லுாரி ஊழியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கியது.
கடந்த, 2019ல், 41 உறுப்பு கல்லுாரிகளும் அரசு கலை அறிவியல் கல்லுாரியாக மாற்றப்பட்டன. தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. மேலும், ஆண்டுக்கு, 11 மாதங்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. மே மாதம் பணி முறிவு காலமாக அறிவித்து சம்பளம் வழங்கப்படுவதில்லை.
நடப்பாண்டு, கூடலுார் அரசு கல்லுாரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள, 41 கல்லுாரியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் கல்லுாரி விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. அதில், அலுவலக பணியாளர்களுக்கு, ஏப்., முதல் (மே மாதம் தவிர்த்து) நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.
பணியாளர்கள் கூறுகையில், 'இக்கல்லுாரிகளில், 15 முதல் 20 ஆண்டுகள் பணியாற்றி, இதுவரை பணி பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஆண்டுக்கு, 12 மாதம் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது, 11 மாதமாக குறைத்துள்ளனர். நடப்பாண்டு, 4 மாதம் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
நிலுவை, சம்பளத்தை உடனே வழங்குவதுடன், ஆண்டுக்கு, 12 மாதங்களும் சம்பளமும், ஊதிய உயர்வும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.