/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மகளிருக்கான இலவச பஸ் ஊட்டியில் திட்டம் துவக்கம்
/
மகளிருக்கான இலவச பஸ் ஊட்டியில் திட்டம் துவக்கம்
ADDED : பிப் 26, 2024 02:31 AM
ஊட்டி;நீலகிரியில் மகளிருக்கான இலவச பஸ் பயண திட்டத்தை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:
மலை மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். ஊட்டியில், ஆரம்பத்தில் மகளிருக்கான இலவச பயணம் திட்டத்தில், சில பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது, 99 பஸ்களுக்கு இலவச பயணம் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் 50,000 மகளிர் பயனடைவர். மலை மாவட்டத்தில், 35 கி.மீ., கிராமப்புறங்களுக்கான இலவச பயண திட்டம் முதன்முதலில் நீலகிரியில் துவக்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளிலும் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

