தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/இலவச கண் சிகிச்சை முகாம் 15 பேருக்கு அறுவை சிகிச்சை

இலவச கண் சிகிச்சை முகாம் 15 பேருக்கு அறுவை சிகிச்சை

இலவச கண் சிகிச்சை முகாம் 15 பேருக்கு அறுவை சிகிச்சை


UPDATED : நவ 23, 2026 06:44 PM

ADDED : நவ 23, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 06:44 PM ADDED : நவ 23, 2026 06:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுாரில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில், 15 பேர் அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பந்தலுார் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர்.

மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் லவ்ரா முகாமினை துவக்கி வைத்து பேசினார்.

தொடர்ந்து, பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர் விஜயஸ்ரீ தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். கொளப்பள்ளி சுகாதார நிலைய பல்நோக்கு செவிலியர்கள் கயல்விழி, நந்தினி, சுகாதார ஆய்வாளர் கவுரிசங்கர் தலைமையிலான குழுவினர், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனைகளை செய்தனர்.

முகாமில், 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், 15 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். பார்வை குறைபாடு உடைய, 50 பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us