/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவச கண் சிகிச்சை முகாம்: 174 பேர் பயன்
/
இலவச கண் சிகிச்சை முகாம்: 174 பேர் பயன்
ADDED : அக் 17, 2024 10:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார் : பந்தலுாரில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில், 174 பேர் சிகிச்சை பெற்றனர்.
பந்தலுார் அருகே கொளப்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில், நீலகிரி சேவா கேந்திரம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை; பைன் கோல்ட் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின.
நீலகிரி சேவா கேந்திர ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். வியாபாரி சங்க தலைவர் ராஜா, ஜீப் ஓட்டுனர் சங்க தலைவர் திவாகரன், ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் திவாகரன், அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் அபிஷேக் ஆகியோர் துவக்கி வைத்தனர். இம்முகாமில், 174 பேர் பயன்பெற்றனர்.