/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் இலவச கண் சிகிச்சை முகாம்
/
பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் இலவச கண் சிகிச்சை முகாம்
பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் இலவச கண் சிகிச்சை முகாம்
பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் இலவச கண் சிகிச்சை முகாம்
ADDED : ஜூன் 10, 2025 09:20 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா குளோபல் பள்ளி வளாகத்தில், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி நிர்வாகம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர்.
பள்ளி முதல்வர் ராஷீதா தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். தேவாலா வனச்சரகர் சஞ்சீவி முகாமினை துவக்கி வைத்தார்.
முதுநிலை கண் மருத்துவர் சரண்யா, முகாமின் முக்கியத்துவம் மற்றும் கண் நோய்கள், அவற்றிற்கான சிகிச்சை வழி முறைகள் குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து, அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட்டு, கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முகாமில், தேவாலா, பந்தலுார், நாடுகாணி, பிதர்காடு, வாழவயல், அத்திக்குன்னா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 100 பேர் பங்கேற்றனர்.
முதுநிலை டாக்டர் ஐஸ்வர்யா, வனவர் சுரேஷ்குமார், பள்ளி நிர்வாகிகள், வனத்துறையினர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர்.