/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் மார்க்கெட் பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம்
/
குன்னுார் மார்க்கெட் பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம்
குன்னுார் மார்க்கெட் பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம்
குன்னுார் மார்க்கெட் பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம்
ADDED : ஏப் 01, 2025 09:49 PM

குன்னுார்; குமார் மார்க்கெட்டில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
குன்னுார் மார்க்கெட் பகுதியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில், இல்லம் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பொது மருத்துவ முகாம் நடந்தது. மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொது பரிசோதனை செய்யப்பட்டது.
நோய் பாதிப்பு இருந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ திட்ட சுகாதார துறையினர் சிகிச்சை அளித்தனர். அதில், 137 பேர் பங்கேற்று பயன் பெற்றனர். முகமை சங்க தலைவர் கோபால் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை, பொதுச் செயலாளர் சாந்தா குரூஸ், செயலாளர் பிரபு உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.