தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/இலவச காது கேட்கும் கருவிகள்

இலவச காது கேட்கும் கருவிகள்

இலவச காது கேட்கும் கருவிகள்


UPDATED : நவ 29, 2026 06:44 PM

ADDED : நவ 29, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 06:44 PM ADDED : நவ 29, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலூர்: கூடலூரில் ரோட்டரி கிளப் சார்பில், 40 பயனாளிகளுக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டது.

கூடலூர் ரோட்டரி கிளப், குன்னூர் கின்டர் அறக்கட்டளை சார்பில், கூடலூரில் இலவச காது கேட்கும் கருவி வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ரோட்டரி கிளப் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். கூடலூர் டி.எஸ்.பி., கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினர்.

ஏற்கனவே, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு, 16 லட்சம் ரூபாய் ஆகும்.

விழாவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் தாஹிர், செயலாளர் ஜினோத், உதவி கவர்னர் சுபேர் அகமத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us