/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவச மருத்துவ முகாம் 300 பேருக்கு பரிசோதனை
/
இலவச மருத்துவ முகாம் 300 பேருக்கு பரிசோதனை
ADDED : மார் 23, 2025 10:00 PM

கோத்தகிரி : கோத்தகிரி அரவேனு பஜாரில் நடந்த இலவச மருத்துவ முகாமில், 300 பேர் பயனடைந்தார்.
கோவை பி.எஸ்.ஜி., மருத்துவமனை, குன்னுார் ரவுண்ட் டேபிள் மற்றும் கன்னவரை தேயிலை தொழிற்சாலை ஆகியவை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில், பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி முதல்வர் டாக்டர் சுப்பராவ், இயக்குனர் புவனேஸ்வரன் மற்றும் பொது மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் தலைமையிலான, 21 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
முகாமில், 'பொது மருத்துவம், மகளிர், குழந்தைகள் நலம், தோல், எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை,' என, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ ஆலோசனையுடன், மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. அதில், 300க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். ஏற்பாடுகளை குன்னுார் ரவுண்ட் டேபிள் தலைவர் சபரீஷ் தேவராஜ் உட்பட பலர் செய்திருந்தனர்.