/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவச மருத்துவ முகாம் பொதுமக்கள் பயன்
/
இலவச மருத்துவ முகாம் பொதுமக்கள் பயன்
ADDED : ஆக 28, 2025 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார், ; கூடலுாரில் நடந்த, இலவச மருத்துவ முகாமில் மின் ஊழியர்கள், பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர்.
கூடலுாரில் மின் வாரியம், செஞ்சிலுவை சங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.
சூழல் மையத்தின் செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். உதவிமின் பொறியாளர் ஹரி முன்னிலை வகித்தார்.கூடலுார் கோட்ட பொறியாளர் முத்துக்குமார் துவக்கி வைத்தார்.
செஞ்சிலுவை சங்க டாக்டர் ஜெய்னப் பாத்திலா தலைமையில், செவிலியர் சுமதி, மருந்தாளர் நவீன், ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர், மின் ஊழியர்கள், பொதுமக்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.