/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நஞ்சநாடு கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்
/
நஞ்சநாடு கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்
ADDED : பிப் 03, 2025 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; ஊட்டி ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில், நஞ்சநாடு கிராமத்தில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ஊர் தலைவர் மணி தலைமை வகித்தார். ரெட்கிராஸ் சேர்மன் கோபால் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவ குழுவினர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து வழங்கினர். முகாமில், துணை சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மோரிஸ் சாந்தா குருஸ் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். திரளான மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

