/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவச தையல் பயிற்சி நிறைவு; பெண்களுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி
/
இலவச தையல் பயிற்சி நிறைவு; பெண்களுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி
இலவச தையல் பயிற்சி நிறைவு; பெண்களுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி
இலவச தையல் பயிற்சி நிறைவு; பெண்களுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி
ADDED : ஏப் 02, 2025 10:07 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே, உப்பட்டியில் இலவச தையல் பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தையல் பயிற்சி ஆசிரியர் சுலோச்சனா தலைமை வகித்து பேசுகையில்,''பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வரும் நிலையில், கிராமப்புற பெண்கள் மத்தியில் வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் எனும் நோக்கத்தில், பெண்களுக்கு தொடர்ந்து தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அழகு கலை தையல் பயிற்சி நிறைவு செய்துள்ள நிலையில், அரசு மூலம் வழங்கும் தையல் திட்டங்களை பெற்று, சுய தொழில் செய்து முன்னேற்றம் காண்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும். பயிற்சி நிறைவு செய்த பெண்கள் வீட்டில் முடங்காமல், குழுவாக இணைந்து தையல் தொழில் செய்ய முன்வந்தால் அதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்,'' என்றார்.
தொடர்ந்து, 'ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட்' நிர்வாகி விஜயன் சாமுவேல், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சிவசுப்ரமணியம், அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் மகேஸ்வரன் உட்பட பலர், பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.
பயிற்சி மைய ஆசிரியை ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

