/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் சாலையில் அடிக்கடி விபத்து; 'ரோலர் சேப்டி பேரியர்' அவசியம்
/
கூடலுார் சாலையில் அடிக்கடி விபத்து; 'ரோலர் சேப்டி பேரியர்' அவசியம்
கூடலுார் சாலையில் அடிக்கடி விபத்து; 'ரோலர் சேப்டி பேரியர்' அவசியம்
கூடலுார் சாலையில் அடிக்கடி விபத்து; 'ரோலர் சேப்டி பேரியர்' அவசியம்
UPDATED : ஏப் 24, 2025 11:48 PM
ADDED : ஏப் 24, 2025 11:03 PM

கூடலுார், ; ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, நடுவட்டம்- கூடலுார் இடையே பாதிப்புகளை தவிர்க்க கொண்டை ஊசி வளைவுகளில் 'ரோலர் சேப்டி பேரியர்' தடுப்புகள் அமைக்க வேண்டும்.
கூடலுார்- நடுவட்டம் இடையேயான, 16 கி.மீ., துாரமுள்ள சாலை அதிக வளைவுகளை கொண்டுள்ளது. மேலிருந்து கூடலுார் நோக்கி வரும் பல வாகனங்கள் விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதனால், கீழ்நோக்கி வரும் வாகனங்கள், 2வது கியரை பயன்படுத்தி இயக்க போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
எனினும், வெளி மாநில ஓட்டுனர்கள் அதிக வேகத்தில் வாகனங்களை கீழ்நோக்கி இயக்குவதால், பல நேரங்களில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குவது வாடிக்கையாகஉள்ளது.
இச்சாலையில், அடிக்கடி விபத்துகள் நடக்கும் தவளமலை, சில்வர் கிளவுட் அருகே உள்ள கொண்டை ஊசி வளைவு உள்ளிட்ட பல பகுதிகளில், வாகன விபத்தின் பாதிப்புகளை தடுக்க 'ரோலர் சேப்டி பேரியர்' தடுப்புகள் அமைக்க வலியுறுத்தியுள்ளனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'இச்சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் மற்றும் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர்.
கொண்டை ஊசி வளைவு பகுதிகளில், விபத்தின் பாதிப்புகளை குறைக்கும் வகையில், புதிய தொழில்நுட்பம் முறையான, 'ரோலர் சேப்டி பேரியர்' தடுப்புகள் அமைக்க, வேண்டும்,' என்றனர்.