தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அடிக்கடி தொடரும் மின்தடை: பாதிக்கப்படும் கிராம மக்கள்

 அடிக்கடி தொடரும் மின்தடை: பாதிக்கப்படும் கிராம மக்கள்

 அடிக்கடி தொடரும் மின்தடை: பாதிக்கப்படும் கிராம மக்கள்


ADDED : மார் 23, 2026 10:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 10:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் அருகே உப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

பந்தலுார் அருகே உப்பட்டி துணை மின் நிலையத்திற்க்கு உட்பட்ட, பகுதியில், 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் கடைவீதிகள் அமைந்துள்ளன. கடந்த சில நாட்களாக கிராம மக்கள் வன விலங்கு அச்சத்திலும் நடமாட முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். தற்போது, அரசு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

உதவி மின் பொறியாளர் கார்த்திகேசு கூறுகையில், ''துணை மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தற்போது ஊட்டியில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பழுது நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மின் தடை பிரச்னை விரைவில் சீராகும்,''என்றார்..

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us