/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இமயமலையில் உருவாகும் நன்னீர்: 100 கோடி மக்கள் பயன்
/
இமயமலையில் உருவாகும் நன்னீர்: 100 கோடி மக்கள் பயன்
இமயமலையில் உருவாகும் நன்னீர்: 100 கோடி மக்கள் பயன்
இமயமலையில் உருவாகும் நன்னீர்: 100 கோடி மக்கள் பயன்
ADDED : மார் 23, 2025 09:56 PM

கோத்தகிரி,: கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் பகுதியில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார்.
அதில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ பேசியதாவது:
கடந்த, 1993ம் ஆண்டு முதல், ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன், உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள், 'கிளேசியர் எனப்படும் பனிப் படிவங்களை காப்பாற்றுவது' என்பதாகும்.
உலக அளவில், 75 சதவீதம் பனிப்படிவங்கள், 22 சதவீதமும், 2.35 சதவீதம் நீர் பூமியின் மிக ஆழத்திலும் உள்ளது. மீதமுள்ள, 0.65 சதவீதம் நீர் தான் ஆறுகள், குளம் மற்றும் குட்டைகளில் உள்ளது.
பொதுவாக, நன்னீரில், 80 சதவீதம் விவசாயத்திற்கும், உணவு உற்பத்திக்கும் மட்டுமே பயன்படுகிறது. இயற்கையில் கிடைக்கும் தண்ணீரை, சிக்கனமாக பயன்படுத்தி, நீர் ஆதாரங்களை பாதுகாப்பது குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
பனி படிவங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஒன்றின் மீது ஒன்றாக படிந்து, அண்டார்டிகா மற்றும் இமய மலைபகுதிகளில் பனிப்படிவங்கள் உருவாகின்றன. இந்த பனி தான் நன்னீர் வளத்திற்கான ஆதாரம்.
இமயமலை பனிபடிவங்களில் இருந்து உருவாகும் தண்ணீரை நம்பி, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற பல நாடுகளில் வசிக்கும், 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இதே பனிப்படிவங்களை சுற்றி இதற்கே உரித்தான பல்லுயிர் சூழல்கள் அமைந்துள்ளன. மூன்றாவது உலக யுத்தம் வந்தால், அது தண்ணீருக்காக தான் இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பூமியில் உள்ள ஒவ்வொரு சொட்டு நீரும் விலைமதிப்பற்ற உயிர் நீர் என்பது, உலக நீர் தினத்தின் செய்தியாகும். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லுாரி மாணவியர் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.