/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
32 ஆண்டுக்கு பின் சந்தித்து மகிழ்ந்த நண்பர்கள்
/
32 ஆண்டுக்கு பின் சந்தித்து மகிழ்ந்த நண்பர்கள்
ADDED : மே 23, 2025 07:00 AM

பந்தலுார், : பந்தலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 1991 முதல் 93 ஆம் ஆண்டு வரை மேல்நிலை வகுப்பில் படித்த வகுப்பு தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி எருமாடு பகுதியில் நடந்தது.
ஆசிரியர் ரெஜி வரவேற்றார். முதன்மை ஒருங்கிணைப்பாளர் அகிலேஷ் தலைமை வகித்து பேசுகையில், ''எந்த வசதிகளும் இல்லாமல் கடந்த, 32 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த, வகுப்பு நண்பர்கள், தங்கள் குடும்பங்களுடன் சந்தித்து மகிழும் இந்த நிகழ்ச்சி, மனதிற்கு ஆறுதலை தருவதாக அமைந்துள்ளது.
இனி வரும் காலங்களில், அவர்களின் குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்று, தோழமையோடு உறவுகளை மேம்படுத்தி கொள்ள இது ஏதுவாக அமைகிறது,'' என்றார்.
தொடர்ந்து வகுப்பு தோழர்கள் தங்களது, குடும்பங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். கவிதை, பாடல், சொற்பொழிவு, நடனம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. இதில், சென்னை, மதுரை, திருப்பூர், கோவை, கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நண்பர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை அகிலேஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், ஒப்பந்ததாரர் ஹரிஹரன், சிந்து உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.