/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்பை சேதப்படுத்திய ஒற்றை யானையால் அச்சம்
/
குடியிருப்பை சேதப்படுத்திய ஒற்றை யானையால் அச்சம்
ADDED : பிப் 14, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்:பந்தலுார் அருகே சேரங்கோடு பகுதியைசேர்ந்தவர் ஜான். இவரது குடியிருப்பு பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த ஒற்றை யானை, வீட்டை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கட்டடத்தின் மேற்கூரை மற்றும் கதவுகளை சேதப்படுத்தியது. சில மணி நேரம் அதே பகுதியில் நின்ற யானை, வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது.
அந்த பகுதியில் இருந்தவர்கள், வனத்துறையினர் சப்தம் எழுப்பி யானையை துரத்தினர். அப்போது,காபி தோட்டம் வழியாக அருகில் உள்ள புதர் பகுதிக்குள் சென்றது. வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

