
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; கடந்த வாரம் முதல், ஊட்டியில் அவ்வப்போது உறைபனி தென்பட்டது. குறைந்த பட்ச வெப்பநிலை, 5 டிகிரி செல்ஷியசாக இருந்தது.
நேற்று காலை, நகரின் பல பகுதிகளில், குறிப்பாக புறநகர் பகுதிகளான காந்தள், தலைக்குந்தா, எச்.பி.எப்., ஷூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதி புல்வெளிகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.
ஊட்டியில் நேற்று அதிகபட்சம், 17 டிகிரி; நகர பகுதியில், குறைந்தபட்சம், 3.2 டிகிரி; புறநகர் பகுதிகளில் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. பனி தாக்கத்தால் காலை நேரங்களில் கடும் குளிர் நிலவியது.
ஊட்டி, அரசு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் பாதிக்காமல் இருக்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பூங்கா நிர்வாகம் எடுத்துள்ளது.