/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழகண்காட்சியில் பயன்படுத்திய பழங்கள்: விதை சேகரித்து உரம் தயாரிக்க அகற்றம்

ADDED : ஜூன் 01, 2025 10:18 PM

குன்னுார்:
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் நடந்த, 65வது பழ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பழங்களின் விதைகளை சேகரிக்கவும், மண்புழு உரம் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 65வது பழ கண்காட்சி, கடந்த, 23ல் துவங்கி, 3 நாட்கள் நடந்தது. அதில், 3.8 டன் அளவில், எலுமிச்சை, ஆரஞ்ச், திராட்சை உள்ளிட்ட பழங்களால் பிரம்மாண்ட எலுமிச்சை, பழரச கோப்பை, கடற்கரை குடை, பழமையான கார், பழ கேக். பழ ஐஸ்கிரீம், தொப்பி, விசில், கண்ணாடி, நீர் சறுக்கு மட்டை, பழ கூடைப்பந்து, இளநீர் போன்ற வடிவமைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன.
இந்நிலையில், சில நாட்கள் பெய்த மழையின் தாக்கம் அதிகரித்ததால், பழங்கள் அழுக துவங்கின. தொடர்ந்து, வடிவமைப்புகளில் இருந்த பழங்கள் அகற்றும் பணி இரு நாட்களாக நடந்து வருகிறது.
பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில்,''அகற்றப்படும் இந்த பழங்கள் பழப்பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்டு விதைகள் சேகரிக்க பயன்படுத்தப்படும்.
பழங்கள் அனைத்தும் பிரித்து மண்புழு உரம் தயாரிக்க கொண்டு செல்லப்படும்,'' என்றார்.