/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தாருங்கள்: கிராம கண்காணிப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

ADDED : அக் 07, 2024 12:18 AM
ஊட்டி : ஊட்டி அருகே தலைகுந்தாவில் நடந்த கிராம கண்காணிப்பு குழு கூட்டத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நீலகிரி எஸ்.பி., நிஷா உத்தரவின் பேரில், மாவட்டத்தில் அந்தந்த போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கிராம கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டி அருகே எச்.பி.எப்., மற்றும் தலைக்குந்தா பகுதிகளில் போலீசார் சார்பில் கிராம கண்காணிப்பு குழு கூட்டம் அங்குள்ள சமுதாயக்கூடத்தில் நடந்தது.
கூட்டத்தில், ஊட்டி டவுன் டி.எஸ்.பி., யசோதா தலைமை வகித்து,'கிராம கண்காணிப்பு குழு கூட்டத்தில் குழந்தைகள் நலன் சார்ந்த விழிப்புணர்வு; ஆன்லைன் குற்றங்கள் பொருளாதார குற்றங்கள் மற்றும் காவல் உதவி செயலியின் முக்கியத்துவம்,' குறித்து பேசினார்.
அதில், எச்.பி.எப்., ஊர் பொதுமக்கள் பேசுகையில், 'ஊட்டி - குன்னுார் சாலையில் வளைவான பகுதிகளில் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுவதால் வேகத்தடை ஏற்படுத்தி தர வேண்டும். எச்.பி.எப்., மெயின் கேட்டில் சிறுத்தை, காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்,' என்றனர்.
தலைக்குந்தா பொதுமக்கள் பேசுகையில்,'தங்களது பகுதிகளில் தெருவிளக்கு, கழிப்பிடம் வசதி, தண்ணீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து விடுவதால், சரி செய்து தர வேண்டும், நிழற்குடை அமைத்து தர வேண்டும்,' என்றனர்.
இந்நிகழ்ச்சியில், புதுமந்து இன்ஸ்பெக்டர் நித்யா, எஸ்.ஐ., பிரசாத் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.