/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; முதல்வருக்கு இ----மெயில்
/
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; முதல்வருக்கு இ----மெயில்
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; முதல்வருக்கு இ----மெயில்
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; முதல்வருக்கு இ----மெயில்
ADDED : ஜன 02, 2025 09:49 PM
கூடலுார்l;கூடலுார் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆளும் கூட்டணி கட்சிகள்; மக்கள் சார்பில் முதல்வருக்கு இ-மெயிலில், மனு அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
மாநில சட்டசபை தேர்தலின் போது, மேட்டுப்பாளையத்தில் நடந்த தி.மு.க., பிரசார கூட்டத்தில் பேசிய இன்றைய முதல்வர் ஸ்டாலின், 'நாங்கள் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில், செக்ஷன் 17, நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்,' என, தெரிவித்தார். 'இதுவரை இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என, எதிர்கட்சியினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க., கூட்டணி கட்சியான, காங்., தலைமையில், மா.கம்யூ.,-இ.கம்யூ.,-வி.சி.க., ஐ.யு.எம்.எல்.,- ம.ம.க., -ம.ஜ.க., -மக்கள் நீதி மையம் சார்பில் உருவாக்கப்பட்ட, கூடலுார் தொகுதி மண் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில், வாக்குறுதி நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்வருக்கு ஒரு லட்சம் மனுக்களை இ--மெயிலில் அனுப்ப முடிவு செய்தனர்.
அதற்கான நிகழ்ச்சி, கூடலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்தது. கட்சி நிர்வாகிகள்; பொதுமக்கள் முதல்வருக்கு, இ--மெயில் அனுப்பினர்.
அதில்,'சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்,' என, வலியுறுத்தி உள்ளனர்.
காங்., மாநில பொது செயலாளர் கோசி பேபி கூறுகையில்,''இம்முயற்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், நாங்கள் தோழமை கட்சி என்பதால் எங்கள் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

