/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காந்தி ஜெயந்தி: பழங்குடியினர் மகிழ்ச்சி
/
காந்தி ஜெயந்தி: பழங்குடியினர் மகிழ்ச்சி
ADDED : அக் 02, 2024 11:58 PM

பந்தலுார் : பந்தலுாரில் செயல்பட்டு வரும், மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில், பத்தாம் நம்பர் பழங்குடியின கிராமத்தில், அமைப்பாளர் நவ்ஷாத் தலைமையில் காந்தி ஜெயந்தி விழா நடத்தப்பட்டது.
அதில், காந்தியின் உருவம் பொறித்த கேக் வைக்கப்பட்டு, காந்தியின் பெருமைகள் மற்றும் வரலாற்று தகவல்களை பழங்குடியின மக்கள் மத்தியில் எடுத்து கூறப்பட்டது. பின், பழங்குடியின மூதாட்டி கேக் வெட்டினார். தொடர்ந்து, பழங்குடியின மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு கேக் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம், நிர்வாகி இந்திரஜித், ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
--* பந்தலுார் அனைத்து வணிகர்கள் நலச்சங்கம் சார்பில், காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தபால் நிலையம் செல்லும் படி மற்றும் பாதைகள் சுத்தம் செய்து பொலிவு படுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள்; உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

