/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கஞ்சா கடத்தல்: ஒடிசா வாலிபர் இருவர் கைது
/
கஞ்சா கடத்தல்: ஒடிசா வாலிபர் இருவர் கைது
ADDED : ஜூலை 29, 2025 07:55 PM

பாலக்காடு; பாலக்காட்டில், ஆறு கிலோ கஞ்சாவுடன் இருந்த ஒடிசா வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு ஏ.எஸ்.பி., ராஜேஷ்குமார் அறிவுரையின்படி, எஸ்.ஐ., மகேஷ்குமார் தலைமையிலான பாலக்காடு டவுன் தெற்கு போலீசார், நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஸ்டாண்ட் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரின் பையில் சோதனை செய்த போது, ஆறு கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நடத்திய விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அனந்தமல்லி 35, தாவூத்மல்லி, 29, ஆகியோர் என்பதும், விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.