/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆற்றில் கொட்டப்படும் குப்பை; கண்டுகொள்ளாத நகராட்சி
/
ஆற்றில் கொட்டப்படும் குப்பை; கண்டுகொள்ளாத நகராட்சி
ஆற்றில் கொட்டப்படும் குப்பை; கண்டுகொள்ளாத நகராட்சி
ஆற்றில் கொட்டப்படும் குப்பை; கண்டுகொள்ளாத நகராட்சி
ADDED : பிப் 11, 2025 11:25 PM

குன்னுார்; குன்னுார் நகராட்சி பகுதியில் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளால் பாதிப்பு ஏற்படுகிறது.
குன்னுார், 12வது வார்டில் ஹைதர் அலி கார்டன் பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து, வண்ணார பேட்டை இணைக்கும் சாலையில் ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அதில், 'பிளாஸ்டிக்' பொருட்கள், உணவு கழிவுகள், துணி மூட்டைகள்,' என, ஆற்றோரத்தில் கொட்டுவதால் ஆற்று நீர் மாசடைந்து வருகிறது. இந்த பகுதியில், சுற்றுச்சூழலும் பாதிப்பு ஏற்படுகிறது.
துணை தலைவரின் வார்டாக இருந்தும் தீர்வு காணப்படாமல் உள்ளது. வீடுகள் தோறும் துப்புரவு தொழிலாளர்கள் மூலம் குப்பைகள் வாங்கப்படும் நிலையில், இங்குள்ள குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட நேரங்களில் வீடுகளுக்கு சென்று குப்பை வாங்கப்படாததால், இந்த நிலை ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் கூறுகையில், ' இப்பகுதியில் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதுடன், கூடுதல் பணியாளர்களை நியமித்து, குப்பைகளை வீடுகள் தோறும் சென்று பெறவும், ஆற்றில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.