/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குப்பை கொட்ட தடை விதிக்கப்பட்ட பகுதி; உத்தரவை மதிக்காத உள்ளூர் மக்கள்

ADDED : அக் 08, 2025 10:12 PM

பந்தலுார்; 'பந்தலுார் அருகே கொளப்பள்ளி பஜார் பகுதியில் குப்பை கொட்ட கூடாது,' என்ற அறிவிப்பு வைக்கப்பட்ட போதும், குப்பை குவிவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், குடியிருப்புகள் மற்றும் கடைகளை ஒட்டிய சாலை ஓரத்தில், குப்பைகள்கொட்டப்பட்டு வந்தது.
இதன் கீழ் பகுதியில் தேயிலை தோட்டம் மற்றும் குடிநீர் கிணறு உள்ள நிலையில், குப்பை கொட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், கொளப்பள்ளி நுழைவாயில் பகுதியில் குப்பைகளை கொட்டி வைப்பதால் துர்நாற்றம் வீசி, வெளியூர் பயணிகளை முகம் சுளிக்க செய்தது.
இதனை தொடர்ந்து, 'இந்த பகுதியில் குப்பை கொட்ட கூடாது,' என, ஊராட்சி சார்பில் அறிவிப்புபலகை வைக்கப்பட்டது.
இந்நிலையில், அறிவிப்பையும் மீறி பலரும் குப்பையை கொட்டி வருகின்றனர். சிலர் வேறு பகுதியிலிருந்து வாகனங்களில் குப்பைகளை கொண்டு வந்து, இந்த இடத்தில் கொட்டி செல்வதால், இதனால், இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதுடன், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, அறிவிப்பையும் மீறி குப்பை கொட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.