தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கட்டபெட்டு பஜாரில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு

 கட்டபெட்டு பஜாரில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு

 கட்டபெட்டு பஜாரில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு


ADDED : ஜன 10, 2026 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 06:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி- ஊட்டி சாலையில் அமைந்துள்ள கட்டபெட்டு பஜாரில், வங்கிகள், தனியார் கிளினிக்குகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உட்பட, குடியிருப்புகள் நிறைந்துள்ளன. கக்குச்சி, நடுஹட்டி ஊராட்சிகள் மற்றும் ஜெகதளா பேரூராட்சியின் எல்லையாக இப்பகுதி அமைந்துள்ளது. கிராமப்புறங்களில் இருந்து, நகரப்பகுதிக்கு வருவோர், கட்டபெட்டு பஜாரை கடந்து தான் சென்று வர வேண்டும். தவிர, இவ்வழித்தடத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், குடியிருப்புகளை ஒட்டி, சமீபக்காலமாக, குப்பைகள் கொட்டப்பட்டுஅகற்றப்படாமல் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றத்துடன், கொசுத்தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, ஹெத்தையம்மன் திருவிழா நடந்து வரும் நிலையில், பக்தர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, ஜெகதளா பேரூராட்சி நிர்வாகம், தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us