/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரத்தில் குவியும் குப்பை; பஜார் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு

ADDED : டிச 06, 2024 10:48 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே பிதர்காடு பஜார் சாலையோரத்தில் குப்பைகள் நிறைந்துள்ளதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிதர்காடு பஜார் பகுதி அமைந்துள்ளது. ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலையில் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு, அவ்வப்போது தீ வைக்கப்படுகிறது.
சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளதால், அதில் இருந்து எழும் துர்நாற்றம் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், இந்த வழியாக யானைகள் இரவு நேரத்தில் வந்து செல்லும் நிலையில், குப்பையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை உட்கொள்ளும் போது பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
எனவே, ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.