/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் முதல் முறையாக பூண்டு ஏலம்; மாவட்ட விவசாயிகளுக்கு நேரடி பலன்
/
குன்னுாரில் முதல் முறையாக பூண்டு ஏலம்; மாவட்ட விவசாயிகளுக்கு நேரடி பலன்
குன்னுாரில் முதல் முறையாக பூண்டு ஏலம்; மாவட்ட விவசாயிகளுக்கு நேரடி பலன்
குன்னுாரில் முதல் முறையாக பூண்டு ஏலம்; மாவட்ட விவசாயிகளுக்கு நேரடி பலன்
ADDED : ஆக 14, 2025 08:12 PM

குன்னுார்; குன்னுாரில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் மையத்தில், முதல் முறையாக, நேற்று ஊட்டி பூண்டு ஏலம் நடந்தது.
குன்னுார் எடப்பள்ளி அருகே இளித்தொரை கிராமத்தில், 6.5 ஏக்கரில், 2 கோடி மதிப்பில், ஒருங்கிணைந்த வேளாண் சந்தை அமைக்கப்பட்டது. மாநில முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக கடந்த ஆண்டு திறந்து வைத்தார். இந்த மையம் செயல்படாமல், இருந்த நிலையில், இதனை திறந்து செயல்படுத்த சமூக ஆர்வலர் விஸ்வநாதன் உட்பட விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.
இதை தொடர்ந்து, நேற்று வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை வேளாண் துணை இயக்குனர் கண்ணாமணி மேற்பார்வையில், அரசு கொறடா ராமச்சந்திரன் இதனை துவக்கி வைத்தார். தொடர்ந்து நடந்த ஏலத் தில், 10 ஆயிரம் கிலோ வரை, ஊட்டி பூண்டு ஏலத்திற்கு வந்தது. அதில், மசின குடியை சேர்ந்த விவசாயி பவித்ரா கொண்டு வந்த பூண்டு கிலோ, 200 ரூபாய் வரை ஏலம் போனது. இனி வாரம்தோறும் வியாழக் கிழமை பூண்டு ஏலம் விடப்பட உள்ளது.
மேலும், ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றையும் மறைமுக ஏலம் வாயிலாக கொள்முதல் செய்ய, நீலகிரி மாவட்ட வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கம் முடிவு செய்துள்ளது.
விவசாயிகள் கூறுகையில், ''நேரடியாக விவசாயிகள் இங்கு தங்களின் விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதால், எந்தவித கமிஷனும் இல்லாமல், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது,''என்றார்.