/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை தொடர் சரிவு!வருமானம் இழப்பால் விவசாயிகள் கவலை
/
வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை தொடர் சரிவு!வருமானம் இழப்பால் விவசாயிகள் கவலை
வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை தொடர் சரிவு!வருமானம் இழப்பால் விவசாயிகள் கவலை
வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை தொடர் சரிவு!வருமானம் இழப்பால் விவசாயிகள் கவலை
ADDED : அக் 27, 2025 10:54 PM

ஊட்டி:வடமாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால், நீலகிரி பூண்டு கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாகவும், மருத்துவ குணம் உடையதாகவும் உள்ளது. நீலகிரி பூண்டுக்கு எப்பொழுதும் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால், நீலகிரி மாவட்டம் ஊட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
விலை வீழ்ச்சி தற்போது விவசாயிகள் விளைவித்த பூண்டை அறுவடை செய்து, லாரிகள் மூலம் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். ஆனால், தற்போது இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மிக குறைந்த விலையில் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுவதுடன் உள்ளூர் மக்களின் பூண்டு வரத்தும் அதிகரித்துள்ளது. ஊட்டி மார்க்கெட்டிற்கு பூண்டு வரத்து அதிகரித்த காரணமாக பூண்டின் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சியடைந்து உள்ளது. தற்போது ஊட்டி சந்தைகளில் கிலோ ரூ.30 முதல் ரூ.80 வரை தரத்திற்கு ஏற்ப குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணங்கள், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் பூண்டு வரத்து அதிகரித்ததும், சந்தையில் அதிகளவில் பூண்டு கையிருப்பில் இருப்பதாகும். விலை சரிந்ததால் பூண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதித்துள்ளது
விவசாயி பெள்ளி கூறுகையில், ' பூண்டு கிலோ ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை கொள்முதல் செய்யப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்தது. ஆனால், தற்போது காய்கறி மண்டிகளுக்கு பூண்டு வரத்து அதிகரித்து உள்ள காரணத்தால், ஒரு கிலோ பூண்டு ரூ.60 முதல் ரூ.80 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வரு கிறது. ' என் றார்.
20 ஆயிரம் டன்
உற்பத்தி
நீலகிரியில் ஆண்டுக்குச் சராசரியாக 20,000 டன் பூண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இது முதல் போகத்தில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவிலும், இரண்டாவது போகத்தில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்படுகிறது.

