/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூண்டு விலை 50 % வீழ்ச்சி; ஏமாற்றம் அடைந்த விவசாயிகள்
/
பூண்டு விலை 50 % வீழ்ச்சி; ஏமாற்றம் அடைந்த விவசாயிகள்
பூண்டு விலை 50 % வீழ்ச்சி; ஏமாற்றம் அடைந்த விவசாயிகள்
பூண்டு விலை 50 % வீழ்ச்சி; ஏமாற்றம் அடைந்த விவசாயிகள்
ADDED : செப் 08, 2025 09:41 PM

கோத்தகிரி; கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பூண்டு பயிரிட்ட விவசாயிகள் விலை வீழ்ச்சி காரணமாக, ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், நீராதாரம் உள்ள நிலப்பரப்பில் விவசாயிகள் பூண்டு பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். குறிப்பாக, கோத்திகிரி பகுதியில், கூக்கல்தொரை, ஈளாடா மற்றும் கட்ட பெட்டு பகுதிகளில் அதிக பரப்பளவில் பூண்டு பயிரிடப்பட்டுள்ளது. விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுப்பொருட்களின் விலை அதிகமாக உள்ளதாலும், கூலி உயர்வு காரணமாக, அதிக செலவினங்களை விவசாயிகள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
தோட்டத்திற்கு செலவிட்ட முதலீடு அதிகமாக உள்ளதால், குறைந்தபட்சம் கிலோ, 300 ரூபாய்க்கு மேல், விற்பனை செய்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். இல்லை எனில், இழப்பை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
தற்போது, சுவை, மணம் மற்றும் மருத்துவ குணம் கொண்ட பூண்டு அறுவடை செய்யப்பட்டு, மேட்டுப்பாளையம் மண்டிகளில் விற்பனைக்காக கொண்டு செல்லும்போது, அதிகபட்சம், 180 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.
இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன், விலை வீழ்ச்சியால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.