தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: காலி சிலிண்டருடன் மக்கள் மறியல்

 காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: காலி சிலிண்டருடன் மக்கள் மறியல்

 காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: காலி சிலிண்டருடன் மக்கள் மறியல்


ADDED : மார் 30, 2026 10:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 10:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டியில் சமையல் காஸ் சிலிண்டர் கிடைக்காததால் பொதுமக்கள் காலி சிலிண்டருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் , அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போர் காரணமாக எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வீடுகளுக்கு தேவையான சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

வீட்டு உபயோக சிலிண்டர்கள் வினியோக காலம் நகர்ப்புறங்களில், 25 நாட்களாகவும் , கிராமப்புறங்களில், 45 நாளாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் கிடைக்காமல் பொதுமக்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. முன்பதிவு செய்தாலும் முறையாக வழங்குவதில்லை. இதனால், ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பத்தினர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், 'முன் பதிவு செய்து, 40 நாட்களுக்கு மேலாகியும் காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படவில்லை,' எனக்கூறி, ஊட்டி எட்டினஸ் சாலையில் பகுதியில் உள்ள சிலிண்டர் ஏஜென்சி முன்பு குவிந்த பொதுமக்கள் சாலையின் குறுக்கே காலி சிலிண்டர் மற்றும் கற்களை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதான சாலை என்பதால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 'முறையாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us