/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடி மக்களுக்கு காஸ் அடுப்பு பொங்கல் பண்டிகை முன்னிட்டு பழங்குடி மக்களுக்கு காஸ் அடுப்பு

ADDED : ஜன 16, 2025 10:38 PM
கோத்தகிரி; கோத்தகிரி அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு, பழங்குடியின மக்களுக்கு காஸ் அடுப்பு வழங்கப்பட்டது.
கோத்தகிரி கொணவக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட, தாளமுக்கை பழங்குடியினர் கிராமத்தில், 2023 -- 24ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தில், தலா, 5.75 லட்சம் ரூபாய் செலவில், 27 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
இந்த வீடுகளின் பயனாளிகளுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஒப்பந்ததாரர் பத்மநாதன் முன்னியில் வீட்டு சாவி வழங்கப்பட்டது. அனைவருக்கும் காஸ் அடுப்பு மற்றும் சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டது. கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ராம்குமார், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் அப்பாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.