தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கெத்தை பேருந்து பிரச்னை: அதிகாரி உறுதி

கெத்தை பேருந்து பிரச்னை: அதிகாரி உறுதி

கெத்தை பேருந்து பிரச்னை: அதிகாரி உறுதி


ADDED : ஜன 01, 2024 09:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2024 09:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மஞ்சூர்:'கெத்தை பேருந்தை இனி முறையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கெத்தை - -ஊட்டி வழித்தட பேருந்து காலை, 7:30 மணிக்கு மஞ்சூரில் புறப்படுகிறது. அரசு, தனியார், கட்டட வேலைக்கு செல்பவர்கள்,கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர்.

காலை, 10:30 மணிக்கு ஊட்டியில் புறப்படும் போது, குந்தா தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு தேவைக்கு மக்கள் வருகின்றனர். 2:30 மணிக்கு மீண்டும் ஊட்டியில் புறப்படும் போது, முதல் 'ஷிப்ட்' கல்லூரிக்கு சென்றுதிரும்பும் மாணவ, மாணவிகள் பயன்படுத்துகின்றனர். மாலை, 4:30 மணிக்கு மஞ்சூரில் புறப்படும் போது பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் பயணிக்கின்றனர்.

மாலை, 6:30 மணிக்கு ஊட்டியில் புறப்படும் போது காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் இதே பஸ்சில் மீண்டும் மஞ்சூருக்கு வருகின்றனர்.

அதிக கலெக் ஷன் தரும் இந்த பஸ்சை பல்வேறு காரணங்களால் அடிக்கடி நிறுத்தப்படுவதால் குறிப்பாக, மஞ்சூர் வழித்தட பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொது மேலாளர் நடராஜன் கூறுகையில்,''கெத்தை பேருந்து பிரச்னை குறித்து பொதுமக்கள், மூலம் புகார் வந்துள்ளது. இனி முறையாக இயக்கப்படும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us