/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு
/
பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஏப் 07, 2025 09:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் அருகே கையுன்னி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின், 65வது ஆண்டு விழா நடந்தது. பி.டி.ஏ., தலைவர் அனீஸ் தேசிய கொடி ஏற்றினார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். ஆசிரியர் ஜோசப் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசவுந்தரி ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் செல்வகுமார் உட்பட பலர் பேசினர்.
தொடர்ந்து, பள்ளி மேலாண்மை குழு பெண்கள் பங்கேற்ற திருவாதிரை நடனம், மாணவர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் பவானி சந்திரசேகர் நன்றி கூறினார்.

