/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி தாவரவியல் பூங்காவில் முதியோருக்கு பரிசு பொருட்கள்
/
ஊட்டி தாவரவியல் பூங்காவில் முதியோருக்கு பரிசு பொருட்கள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் முதியோருக்கு பரிசு பொருட்கள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் முதியோருக்கு பரிசு பொருட்கள்
ADDED : அக் 14, 2025 08:58 PM

ஊட்டி; ஊட்டியில் அறக்கட்டளை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், தனியார் அறக்கட்டளையின் ஓராண்டு நிறைவு விழாவை ஒட்டி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அறக்கட்டளை இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் தொகுப்பினை, கலெக்டர் லட்சுமிபவ்யா வழங்கினார்.
தவிர அறக்கட்டளைக்கு பல்வேறு பணிகள் மற்றும் உதவிகளை செய்த அரசு துறை அலுவலர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. எஸ்பி., நிஷா தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி, ஊட்டி ஆர்.டி.ஓ., டினு அரவிந்த் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.