/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோல் போஸ்ட் உடைப்பு : கால்பந்து வீரர்கள் வாக்குவாதம்
/
கோல் போஸ்ட் உடைப்பு : கால்பந்து வீரர்கள் வாக்குவாதம்
கோல் போஸ்ட் உடைப்பு : கால்பந்து வீரர்கள் வாக்குவாதம்
கோல் போஸ்ட் உடைப்பு : கால்பந்து வீரர்கள் வாக்குவாதம்
ADDED : ஜூலை 31, 2025 09:26 PM

கோத்தகிரி; கோத்தகிரி காந்தி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த, 'கோல் போஸ்ட்' இரும்பு குழாய்களை உடைத்து, முகாம் நடத்த பயன்படுத்தியதை கண்டித்து, நகராட்சி ஊழியர்களுடன் கால்பந்து வீரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி காந்தி மைதானத்தில், கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், கூடைப்பந்து, இறகுபந்து விளையாட்டுகளுக்கு, நாள்தோறும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில், 50க்கும் மேற்பட்டோர் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு நடக்கும் கால்பந்து போட்டிக்காக விளையாட்டு வீரர்கள் தங்களது சொந்த செலவில், 'கோல்ட்போஸ்ட்' தயார் செய்து, மைதானத்தின் ஓரத்தில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், மைதானத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்துவரும் நிலையில், நகராட்சி ஊழியர்கள் சிலர், கோல்ட் போஸ்ட் மற்றும் தாங்கும் குழாய்களை உடைத்து, முகாம் அறிவிப்பு பலகை வைப்பதற்காக பயன்படுத்தி உள்ளனர். நேற்று காலை பயிற்சி மேற்கொள்வதற்காக மைதானத்திற்கு வந்திருந்த விளையாட்டு வீரர்கள், கோல்ட் போஸ்ட் அகற்றப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதை தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் அங்கு வந்த நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, தாசில்தார் ராஜலட்சுமி, துணை தாசில்தார் சுப்ரமணி உட்பட பலர் விளையாட்டு வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், முகாம் நிறைவடைந்தவுடன், புதிய கோல் போஸ்ட் அமைத்து தரப்படும்,' என, உறுதியளித்ததை அடுத்து, வீரர்கள் கலைந்து சென்றனர்.