/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சித்தி விநாயகர் கோவில் திருவிழா; யானை வாகனத்தில் அம்மன் பவனி
/
சித்தி விநாயகர் கோவில் திருவிழா; யானை வாகனத்தில் அம்மன் பவனி
சித்தி விநாயகர் கோவில் திருவிழா; யானை வாகனத்தில் அம்மன் பவனி
சித்தி விநாயகர் கோவில் திருவிழா; யானை வாகனத்தில் அம்மன் பவனி
ADDED : மே 01, 2025 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த ஒரு மாத காலமாக, பல்வேறு உபயதாரர்கள் சார்பில் நடந்து வருகிறது. அதில், குன்னுார் சித்தி விநாயகர் கோவில் தெரு மக்கள் சார்பில், 36வது ஆண்டு தேர்திருவிழா நடந்தது.
விழாவில், முன்னதாக தாரை தப்பட்டைகள் முழங்க, தீயணைப்பு நிலைய விநாயகர் கோவிலில் இருந்து அபிஷேக பொருட்கள் ஊர்வலம் நடந்தது. தந்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. மாலையில் யானை வாகனத்தில் அம்மன் தேர் பவனி நடந்தது. அன்னதானம் உட்பட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.