நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் அருகே அதிகரட்டி கிளை நுாலகராக ராஜசேகர் பணியாற்றி வருகிறார். இவர் பாலகொலா கிராம நுாலகத்தில், பல புரவலர்கள், உறுப்பினர்களை சேர்த்தார்.
மேலும், மாவட்ட மைய நுாலகம், கெந்தொரை, அஜ்ஜுர், மஞ்சூர், மேலுார், நெலாக்கோட்டை, அதிகரட்டி நுாலகங்களிலும், புரவலர்கள், 700 உறுப்பினர்களை சேர்த்தார். 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
இதை தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான அரசின் நல் நுாலகர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவர், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யாவிடம் வாழ்த்து பெற்றார். அவருக்கு வாசகர்கள், புரவலர்கள், உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

