/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தீப்பிடித்து எரிந்த கூட்ஸ் ஆட்டோ; கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்

ADDED : டிச 13, 2024 09:13 PM

குன்னுார்; குன்னுார் காட்டேரி டபுள் ரோடு அருகே, கூட்ஸ் ஆட்டோ தீப்பிடித்து எரிந்து சேதமானது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே நஞ்சப்பா சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதசாமி. இவரின் கூட்ஸ் ஆட்டோ நேற்று முன்தினம் இரவு டபுள்ரோடு அருகே திடீரென தீப்பிடித்துள்ளது. தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர்.
கூட்ஸ் ஆட்டோவின் பெரும்பாலான பகுதி எரிந்து சேதமானது. ஆட்டோ பழுதடைந்ததால் நிறுத்திய ஆட்டோவில் தீப்பிடித்து தடுப்பு சுவரில் மோதி நின்றுள்ளது. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.