/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு கலை கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
/
அரசு கலை கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
அரசு கலை கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
அரசு கலை கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
ADDED : பிப் 13, 2025 09:24 PM

ஊட்டி; 'ஊட்டி அரசு கலை கல்லுாரியில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, யு.ஜி.சி., நிர்ணயித்த, 57,800 ரூபாய் ஊதியம் வழங்குவதுடன், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி அரசு கலை கல்லுாரியில், 1996ம் ஆண்டு முதல் கடந்த, 30 ஆண்டுகளாக தற்போதைய நிலவரம் படி, 25 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில், கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
'தங்களது பணியை கருத்தில் கொண்டு, கூடுதலாக ஊதியம் வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிப்புரிந்து வரும், 1,146 கவுரவ விரிவுரையாளர்கள் பணி பாதுகாப்புக்கு, யு.ஜி.சி., நிர்ணயித்த, 57,800 ரூபாய் ஊதியம் வழங்க, சென்னை ஐகோர்ட்டில், 2019ல் ஆணை பெற்றுள்ளனர்.
ஆனால், அரசு அந்த ஊதியத்தை வழங்கவில்லை. இந்நிலையில், 'ஐகோர்ட் ஆணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தி, நேற்று வகுப்புகளை புறக்கணித்து, கல்லுாரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுரவ விரிவுரையாளர்கள் சங்க ஊட்டி கிளை தலைவர் சேவியர் இன்னாசிமுத்து தலைமை வகித்தார்.
மாநில தலைவர் செந்தில்குமார் மற்றும் பொது செயலாளர் திருஞான சம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 94 விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.