தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பஞ்சராகி நின்ற அரசு பஸ்; பயணிகள் அதிருப்தி

 பஞ்சராகி நின்ற அரசு பஸ்; பயணிகள் அதிருப்தி

 பஞ்சராகி நின்ற அரசு பஸ்; பயணிகள் அதிருப்தி


ADDED : பிப் 04, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் நகராட்சி அலுவலகம் அருகே, அரசு பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பழைய பஸ்கள் பல அடிக்கடி சாலையில் பழுதாகி மற்றும் பஞ்சர் ஆகி நின்று விடுவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பழைய பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டியிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு செல்லும் அரசு பஸ் நேற்று, பயணிகளை ஏற்றி கொண்டு, தேசிய நெடுஞ்சாலை வழியாக கூடலுார் நோக்கி வந்தது.

மதியம், 3:45 மணிக்கு, கூடலுார் நகராட்சி அலுவலகம் அருகே, பஸ்சின் முன் டயர் பஞ்சராகி சாலையோரம் நின்றது. பயணிகள் அதிருப்தி அடைந்தனர். வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து, ஊழியர்கள், பஞ்சரான டயரை மாற்றி பஸ் இயக்கி சென்றனர்.

பயணிகள் கூறுகையில், 'நீலகிரியில் இயக்கப்படும் பல பஸ்களில், பழைய டயர்களை பயன்படுத்துவதால், இதுபோன்ற நிலை அடிக்கடி ஏற்படுகிறது.

பயணிகள் மட்டுமின்றி போக்குவரத்து ஊழியர்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, பஸ்களில் பழைய டயர்களை மாற்றி புதிய டயர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us