/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கல்லாரில் நிறுத்தும் அரசு பஸ்கள்; இரவில் பயணிகளுக்கு சிரமம்
/
கல்லாரில் நிறுத்தும் அரசு பஸ்கள்; இரவில் பயணிகளுக்கு சிரமம்
கல்லாரில் நிறுத்தும் அரசு பஸ்கள்; இரவில் பயணிகளுக்கு சிரமம்
கல்லாரில் நிறுத்தும் அரசு பஸ்கள்; இரவில் பயணிகளுக்கு சிரமம்
ADDED : பிப் 20, 2025 09:52 PM
குன்னுார் ; சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பஸ்கள் கல்லார் பகுதிகளில் நீண்ட நேரம் நிறுத்துவதால் இரவில் வரும்  பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
ஊட்டி, குன்னுார், கூடலுார் உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களில் இருந்து, அரசு பஸ்கள் சமவெளி பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. குறிப்பாக, இந்த பஸ்கள் பர்லியார் பகுதிகளில், உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக சில நிமிடங்கள் நிறுத்தப்படுகின்றன.
சமீப காலமாக இந்த பஸ்கள் இந்த பகுதிகளில் நிறுத்தாமல் கல்லார் பகுதியில், உள்ள தனியார் ஓட்டலில் நிறுத்தப்படுகின்றன.
குறிப்பாக, கோவையில் இருந்த ஊட்டிக்கு இயக்கப்படும் அரசு பஸ், இரவு, 8:50 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நிறுத்தப்படுகிறது. பிறகு, இரவு, 9:15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கல்லார் தனியார் ஓட்டலில் நிறுத்தி இரவு, 10:00 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு, 11:50 மணிக்கு பிறகு ஊட்டி வந்து சேருகிறது. பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
எனவே, போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்து, இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

