ADDED : மார் 20, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
குன்னூர்: குன்னூர் அருவங்காட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் சஜீவன் பிரதமருக்கு அனுப்பிய மனு:
நீலகிரி மாவட்டத்தில், 12 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் சமீபத்தில் தற்காலிக பணியாளர்கள் தேர்வு நடத்தது.
அதில், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் நிரப்பப்பட்டுள்ளனர். இதனால், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாக உள்ளது. இங்குள்ள மாவட்ட மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கி சொந்த ஊரில் பணிபுரியும் வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
