/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் அரசு அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
/
ஊட்டியில் அரசு அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
ஊட்டியில் அரசு அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
ஊட்டியில் அரசு அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
ADDED : ஜன 30, 2024 11:02 PM
ஊட்டி;ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கலெக்டர் அருணா தலைமை வகித்தார். அதில், 'அரசியல் அமைப்பின் அடிப்படை கருத்திற்கு இணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும், பணியாற்றுவது எனது கடமையாக உணர்வேன்; அரசியலமைப்பின்பால் எனக்குள் முழுபற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்,' என, கலெக்டர் உறுதிமொழி வாசிக்க, அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக, மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். டி.ஆர்.ஓ., கீர்த்தி பிரியதர்ஷினி உட்பட, அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.