தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 96 ஊராட்சியாக உயர்த்தி அரசாணை வெளியீடு

 96 ஊராட்சியாக உயர்த்தி அரசாணை வெளியீடு

 96 ஊராட்சியாக உயர்த்தி அரசாணை வெளியீடு


ADDED : டிச 01, 2025 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 01:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னூர்: -நீலகிரி மாவட்டத்தில் 35 ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு, 96 கிராம ஊராட்சிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ், 35 ஊராட்சிகள் உள்ளன.மலைப்பாங்கான இங்கு பரப்பளவு அதிகம் உள்ளதால், வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் . சிரமங்கள் ஏற்பட்டது. 35 ஊராட்சிகளை, 90 ஊராட்சிகளாக பிரிக்க, கடந்த 2021ம் ஆண்டு, அப்போதைய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இந்நிலையில், கடந்த 27ல், தமிழக அரசு வெளியிட்ட, 330 எண் அரசாணையில், நீலகிரியில் உள்ள 35 கிராம ஊராட்சிகளில் , 27 கிராம ஊராட்சிகளை பிரித்து, 88 கிராம ஊராட்சிகளாகவும், மீதமுள்ள 8 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் மொத்தம் 96 கிராம ஊராட்சிகளுடன் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு இதழில் மாவட்ட கலெக்டர் இதனை வெளியிட்டு, இறுதி அறிவிப்பு வெளியிடவும் கூறப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட உள்ளாட்சிகள் மீட்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் மனோகரன், கூறுகையில், நீலகிரி மாவட்டத்தின் தன்மை குறித்து ஊராட்சிகளை சிற்றூராட்சியாக மாற்ற வலியுறுத்தப்பட்டு வந்தது. கிராம ஊராட்சி மறுசீரமைப்புக்கு,2021ல் பரிந்துரை செய்த அப்போதைய கலெக்டருக்கு மக்கள் கடமைப்பட்டுள்ளனர். இதே போல, பழங்குடியினர், சிறு குறு விவசாயிகள் மட்டும் அதிகம் உள்ள பேரூராட்சிகளையும் ஊராட்சிகளாக மாற்ற வேண்டும். என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us