/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இடிந்து விழுந்த அரசு குடியிருப்பு : மூன்று பெண் தொழிலாளர்கள் காயம்
/
இடிந்து விழுந்த அரசு குடியிருப்பு : மூன்று பெண் தொழிலாளர்கள் காயம்
இடிந்து விழுந்த அரசு குடியிருப்பு : மூன்று பெண் தொழிலாளர்கள் காயம்
இடிந்து விழுந்த அரசு குடியிருப்பு : மூன்று பெண் தொழிலாளர்கள் காயம்
ADDED : நவ 13, 2025 09:58 PM

கூடலுார்: கூடலுார் அருகே உள்ள, அரசு தோட்டக்கலை பண்ணையில், பழைய அரசு குடியிருப்பு இடிந்து விழுந்ததில், 3 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் நாடுகாணி அருகே, பொன்னுார் பகுதியில் அரசு தோட்டக்கலை பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு தேயிலை, காபி, பாக்கு, குறுமிளகு, கிராம்பு நாற்றுகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி வருகின்றனர். தற்போது இங்கு, 35 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு தொழிலாளர்கள் தங்குவதற்காக, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஒரு குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்தது. கட்டட இடி பாடுகளுக்கு இடையே பெண் தொழிலாளர்கள் காஞ்சனா, 42, சந்திரமதி, 40, மலாவிழி, 40, ஆகியோர் சிக்கினர். சக தொழிலாளர்கள் விரைந்து செயல்பட்டு, அவர்களை உயிருடன் மீட்டனர்.
படுகாயம் அடைந்த அவர்கள் மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை, கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் உட்பட பலர் சந்தித்து ஆறுதல் கூறினர். சம்பவம் குறித்து தேவாலா போலீசார் விசாரிக்கின்றனர்.